நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ரெட்டியார்பட்டி நாராயணனின் மனு மீது சுயேட்சை வேட்பாளரும் வக்கீலுமான மாரியப்பன் கடும் ஆட்சேபம் தெரிவித்தார். அவர் மீது பாளை பெருமாள்புரம் காவல் நிலையத்தில் உள்ள குற்ற வழக்குகள் மூன்றை குறிப்பிடவில்லை. எனவே, மனுவை நிராகரிக்க வேண்டும் என அவர் எழுத்துப்பூர்வமாக மனு அளித்தும் தேர்தல் அலுவலரான மாவட்ட வழங்கல் அலுவலர் நடேசன் ஏற்கவில்லை.
இதனால் மாநில தேர்தல் ஆணையத்தையும் நீதிமன்றத்தையும் அணுகப்போவதாக மாரியப்பன் தெரிவித்துள்ளார். இதனால் ரெட்டியார்பட்டி நாராயணனின் மனு மீது சிக்கல் எழும் என கூறப்படுகிறது.
(வக்கீல் மாரியப்பன் குற்றச்சாட்டை முகப்பு காணொளியில் காண்க)














