தஞ்சாவூர் மாவட்டம், சீர்காழியில், ராமாமிர்தம் – சீதாலட்சுமி தம்பதிக்கு மகனாக, ரங்கநாதன் 1892 ஆகஸ்ட், 12ல் பிறந்தார். ஒரு குறிப்பிட்ட புத்தகத்தின், பல்வேறு கூறுகளை, துல்லியமாக சொல்லும் சங்கேதக் குறியீட்டு முறையை, 1925 பிப்ரவரியில் உருவாக்கினார்.
1928 ஜன., 2ல், நுாலக சங்கம் உருவாகியது. அதன் தலைவராக, கே.வி.கிருஷ்ணசாமியும், எஸ்.ஆர்.ரங்கநாதன் செயலராகவும் பணியாற்றினர்.நுாலக அறிவியலில், புதிய புரட்சியை ஏற்படுத்தியவர், எஸ்.ஆர்.ரங்கநாதன். ‘நுாலக அறிவியலின் ஐந்து விதிகள்’ என்ற புத்தக தொகுதியை, 1931ல் வெளியிட்டார்.
1935ல், அப்போதைய பிரிட்டிஷ் அரசு, சென்னை மாகாணத்தின் நுாலக மேம்பாட்டிற்கு ஆற்றிய பணிகளுக்காக, அவருக்கு, ‘ராவ் சாகிப்’ என்ற பட்டமும், சுதந்திர இந்தியாவில் பத்மஸ்ரீ பட்டமும் வழங்கப்பட்டது. 1972 செப்டம்பர், 27ல் காலமானார். நுாலக துறையின் பிதாமகன், எஸ்.ஆர்.ரங்கநாதன் பிறந்த தினம் அன்று.













