ஹெல்மெட் அணியாததற்கு அபராதம்: பைக்கை எரித்த தொழிலாளி

0
1576

தூத்துக்குடி தாமோதரன் நகர் பகுதியில் பிளம்பர் ஒருவர் தனது இரு சக்கர வாகனத்தை பெட்ரோல் ஊற்றி எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி திருச்செந்தூர் சாலையில் இருசக்கர வாகனத்தில் ஒருவர் வேகமாக வந்துள்ளார்.  தாமோதரன் நகர் ரவுண்டானா அருகே வாகனத்தை நிறுத்தியவர், திடீரென பெட்ரோல் ஊற்றி தனது இருசக்கர வாகனத்தை எரித்து விட்டு அங்கிருந்து  சென்றார்.

தகவல் அறிந்தவுடன் தென்பாகம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து விரைந்து வந்து தீயை அணைத்தனர். சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் வாகனத்தை எரித்தவர் தூத்துக்குடி தாமோதரன் நகரை சேர்ந்த வேல் என்பதும்,  பிளம்பர் வேலை செய்து வருவதும் தெரியவந்தது.

குடும்ப பிரச்சினை காரணமாக தனது இருசக்கர வாகனத்தை பெட்ரொல் ஊற்றி எரித்ததாக போலீசார் தெரிவித்தனர். ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்தபோது போலீசார் பிடித்ததால் ஆத்திரம்
எரித்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

வேலை பிடித்து விசாரணை நடத்திய பிறகு தான் எதற்காக வாகனத்தை எரித்தார் என்பது தெரிய வரும்.

(முகப்பு பக்கத்தில் காணொளி காண்க)

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here