தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியை சேர்ந்த முத்துராஜ் (28) என்பவர் மட்டக்கடை பகுதியில் கஞ்சா விற்பனை செய்து கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கையும் களவுமாக பிடித்த போலீசார் முத்துராஜை கைது செய்து அவரிடமிருந்த 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து படபகம் போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.









