தென்காசி ஆட்டோக்களுக்கு கண்காணிப்பு ஸ்டிக்கர்

0
1281

நெல்லை மாவட்டம் பிரிக்கப்பட்டு தென்காசி மாவட்டம் உருவாகியுள்ள நிலையில் குற்ற சம்பவங்களை தடுத்திட போலீசார் புதிய முயற்சிகளை கையில் எடுத்து வருகின்றனர். தென்காசி நகர் பகுதிகளில் மட்டும் உள்ள சுமார் 26 ஆட்டோ நிறுத்தங்களில் இருந்து தினந்தோறும் 500 ஆட்டோக்கள் வரை இயக்கப்படுகிறது.

ஆட்டோகளில் சவாரி செய்யும் போது பயணிகள் உடமைகளை தவறி விட்டு விடுதல், சந்தேகத்தின் பெயரில் கொள்ளையர்கள் பயணம் செய்யும் போது அது குறித்த நடவடிக்கைகளை கண்காணித்து குற்ற செயல்களை தடுத்திடவும் ஆட்டோக்களுக்கு முதற்கட்டமாக பல வண்ணங்களில் ஸ்டிக்கர் ஒட்டும் பணியை தென்காசி காவல்துறை துணை கண்காணிப்பாளர் கோகுல கிருஷ்ணன் மேற்பார்வையில் தென்காசி காவல் ஆய்வாளர் ஆடிவேல், உதவி ஆய்வாளர் மாதவன் தனி பிரிவு முதன்மை காவலர் முத்துராஜ் துவக்கி வைத்தனர்.

இதன் மூலம் குற்ற சம்பவங்கள் ஈடுபடுவர்களை விரைந்து பிடித்திட முடியும் எனவும் , போக்குவரத்து நெரிசல் குறையும் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர் . மேலும் பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி ஆட்டோ டிரைவர்கள் காவல் துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here