தாமிரபரணியில் சாக்கடை கால்வாய்கள் மூலம் கழிவை கலக்கும் மாநகராட்சி கண்டித்து வரும் 27ஆம் தேதி முற்றுகை ஆர்ப்பாட்டம் நடக்கவுள்ளது.
அதை முன்னிட்டு இன்று நெல்லையில் தாமிரபரணி மாசு கலப்பு எதிர்ப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுர விநியோகமும் பிரச்சாரமும் நடைபெற்றது.

நெல்லை புதிய பஸ் நிலையத்தில் அனைத்து பிளாட்பாரங்களிலும் விழிப்புணர்வு பிரச்சாரம் விநியோகித்த பாதுகாப்பு இயக்கத்தினர், சேவியர் காலனி, வண்ணார்பேட்டை,கொக்கிரகுளம், கைலாசபுரம் விலக்கு, நெல்லை சந்திப்பு, சிந்துபூந்துறை ஆகிய பகுதிகளுக்கும் சென்றனர்.
இதில் இயக்கப் பொதுச் செயலாளரான இதழாளர் அய்கோவுடன், குயிலி நாச்சியார், சிந்துபூந்துறை மணி, கொக்கிரகுளம் முத்துராமன், வண்ணார்பேட்டை கணேசன், ஜெயகோபால், பால் அண்ணாதுரை, அருள்ராஜ், மணப்படை பிரவீன், டோரா, ஜெலின், ராபின், குந்தவை உட்பட பலர் பங்கேற்றனர்.

அனைத்து இடங்களிலும் மக்கள் தாமிரபரணியின் நிலை குறித்த தங்கள் ஆதங்கத்தை வேதனையுடன் வெளிப்படுத்தினர்.