நெல்லையில் இருந்து கோவை காந்திபுரத்திற்கு சென்ற அரசு பேருந்தை மதுரை ஆரப்பாளையம் பஸ் நிலையத்தில் டிரைவர் கண்டக்டர் ரகளை ஈடுபட்டது பயணிகள் மத்தியில் அதிப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை திருப்பூர் ஈரோடு சேலம் சென்னை உள்ளிட்ட தொலைதூர பகுதிகளுக்கு நெல்லையில் இருந்து அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. குறிப்பாக விசேஷ காலங்களான சுபமுகூர்த்தம், தீபாவளி, தசரா திருவிழா, பொங்கல், கிறிஸ்துமஸ் உள்ளிட்ட முக்கிய தினங்களில் மக்களின் போக்குவரத்து அதிகமாக இருக்கும் என்பதால் தொலைதூர பகுதியில் இருந்து நெல்லை தூத்துக்குடி திருச்செந்தூர் நாகர்கோவில் கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கமானது.
நேற்று முன் தினம் பள்ளி விடுமுறை முடித்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வசதிக்காகவும், தொலைதூரங்களுக்குச் சென்ற மக்கள் சொந்த ஊர் திரும்பும் வகையிலும் வார விடுமுறை நாள் என்பதாலும் ஏராளமான சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
கோயமுத்தூர் திருப்பூர் உள்ளிட்ட பகுதியிலிருந்து இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகள் அந்தந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
நேற்றிரவு நெல்லையில் இருந்து புறப்பட்ட பேருந்துகளில் மக்களின் கூட்டம் குறைவாக காணப்பட்டது. இதனால் திருப்பூர் கோவை பகுதிகளுக்கு இயக்கப்பட வேண்டிய பேருந்துகள் மதுரைக்கு இயக்கப்பட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர்.
இந்நிலையில்,மதுரைக்கு செல்லாமல் நேரடியாக புற வழியாக கோயம்புத்தூருக்கு செல்ல சில பேருந்துகளில் பயணிகள் ஏற்றப்பட்டனர். ஆனால் இந்த சிறப்பு பேருந்துகளின் கண்டக்டர்கள், ஆரப்பாளையம் பஸ் நிலையம் சென்று அங்குள்ள பணி மனை அதிகாரி முன்பு கையெழுத்திட்டு அதற்கான முத்திரை வாங்க வேண்டும் என பணித்துள்ளனர்.
இதனால், பைபாஸ் வேலை கோயம்புத்தூர் என்று பேருந்தில் ஏற்றப்பட்ட பயணிகள் பாதிக்கப்பட்டனர்.
அது மட்டுமல்ல, ஆரப்பாளையம் பஸ் நிலையத்தில் இந்த சிறப்பு பேருந்தில் திருப்பூர் மற்றும் கோவைக்கு செல்லும் பயணிகள் ஏறியதால்,
ரெகுலராக வரிசையில் நின்று பேருந்துகளை இயக்கி நடத்துபவர்கள், கண்டக்டர்கள் இவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.

இதேபோல் நேற்று இரவு திருநெல்வேலியில் இருந்து கோவை காந்திபுரத்திற்கு இயக்கப்பட்ட சிறப்பு பேருந்து ஆரப்பாளையம் பணிமனையில் கையெழுத்துக்காக நின்றபோது அதில் பயணிகள் ஏறினர். அப்போது வரிசையில் காத்திருந்த அரசு பஸ் டிரைவர்கள் கண்டக்டர்கள் இந்த சிறப்புப் சேர்ந்து வழிமறித்து பேருந்த இயக்கக் கூடாது என டிரைவர், கண்டக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து போக்குவரத்து கழக கண்காணிப்பு அதிகாரிகள் சிறப்பு பஸ் கண்டக்டர், டிரைவரை கண்டித்ததோடு, ஆரப்பாளையம் பஸ் நிலையத்தில் நின்று வழக்கமான பேருந்துகள் இருக்கு பின்னால்தான் புறப்பட வேண்டும் என்று பணித்தனர்.
இதனால் வேறு வழியின்றி சிறப்பு பேருந்தை ஆரப்பாளையம் பஸ் நிலையத்தில் நிறுத்தி காத்திருந்தனர். சுமார் ஒரு மணி நேரம் கழித்தே மீண்டும் பேருந்தை இயக்க அனுமதித்தனர்.
இதனால் பைபாஸ் சர்வீஸ் என நினைத்து பஸ்ஸில் பயணித்தவர்கள் ஒரு மணி நேரத்துக்கு மேல் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது. எனவே, ஆரப்பாளையம் பணிமனை கையெழுத்து, முத்திரை என்ற ஏற்பாட்டுக்கு பதிலாக,
மாற்று நடவடிக்கை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று திருநெல்வேலி உள்ளிட்ட நெடுந்தோரங்களிலிருந்து பஸ் ஏறும் பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
.