நெல்லை அருகே ஊராட்சி தலைவிமீது கொலை முயற்சி : 6 பேருக்கு இரட்டை ஆயுள்

0
665

நெல்லை அருகே உள்ள வடக்கு தாழையூத்து பஞ்சாயத்து தலைவியாக பணியாற்றியவர் கிருஷ்ணவேணி. இவர் மீது 2011 இல் ஒன்பது பேர் அடங்கிய கும்பல் கொலை வெறி தாக்குதலை நடத்தியது.

அது குறித்து தாழையூத்து போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த வழக்கு நெல்லை வன்கொடுமை நீதிமன்றத்தில் 13 ஆண்டுகளாக நடந்து வந்தது. இதில் ஒருவர் இறந்து விட, மற்ற எட்டு பேரும் குற்றவாளிகள் என்று நேற்று முன்தினம் தீர்ப்பிடப்பட்டு, இன்று அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டது.

இதில் ராமகிருஷ்ணன் என்பவரும் சந்தனமாரி என்பவரும் விடுதலை செய்யப்பட்டனர். மற்ற ஆறு பேரான சுப்பு என்ற சுப்பிரமணியம், சுல்தான், மைதீன்,கார்த்திக், ஜேக்கப் பிரவீன் ராஜ் விஜய மூர்த்தி ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் தலா ஒரு லட்சத்து 30 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. பிரவீன் ராஜ்க்கு மட்டும் ஒரு லட்சத்து 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

தண்டனை பெற்றவர்கள் தங்களுக்கு நெல்லை மதுரை உள்ளிட்ட சிறைகளில் பாதுகாப்பு இல்லை என்று கூறியதால் அவர்களை வேறு சிறைக்கு மாற்றலாம் என தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here