ஊட்டி மலை ரயில் இரு வாரம் ரத்து

0
713


கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நீலகிரி மாவட்டம் குன்னூர், பர்லியார் மற்றும் மலைக்காடுகளில் தொடர் மழை பெய்து வருகிறது.
இதனால் கடந்த 22ஆம்தேதி கல்லாறு -அடர்லி ரெயில் நிலையங்கள் இடையே மலை ரெயில் தண்டவாளத்தில் ராட்சத பாறைகள் விழுந்தன. இதையடுத்து அந்த பாறைகள் வெடி வைத்து தகர்க்கப்பட்டன.

ஆனால் ரெயில் பாதையை சீரமைக்கும் பணி முடியாததால் கடந்த 23ஆம் தேதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை மேட்டுப்பாளையம் – ஊட்டி மலை ரெயில் சேவையை ரத்து செய்து தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவித்தது


இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் தொடர்மழை பெய்வதால் மேட்டுப்பாளையம் -ஊட்டி மலை ரெயில் பாதையில் ஆங்காங்கே மண்சரிவு ஏற்படுகிறது.
அதை சீரமைக்கும் பணியில் ரெயில்வே தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.


எனவே, மேட்டுப்பாளையம் -ஊட்டி மற்றும் ஊட்டி- மேட்டுப்பாளையம் மலை ரெயில் சேவை வருகிற 15ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தென்னக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here