ஜாமீன் கிடைத்தும் விடுதலை இல்லை சிதம்பரம் கவலை

0
1814

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்ட சிதம்பரம் ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடியான நிலையில் உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்தார்.
அதில் இன்று நீதிபதி பானுமதியால் நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. சிபிஐ விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும். முன் அனுமதியின்றி வெளிநாடு செல்லக்கூடாது என்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. ஜாமீன் கிடைத்தாலும் அமலாக்கத்துறை வழக்கில் வரும் 24ஆம்தேதி வரை நீதிமன்ற காவல் இருப்பதால் திஹார் சிறையிலிருந்து உடனடியாக விடுதலையாக முடியாத சூழலில் சிதம்பரம் உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here