தூத்துக்குடியில் கடத்தல் பீடி இலை மூடைகள் பறிமுதல்

0
388

தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கு பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் தொடர்ந்து கடத்தப்பட்டு வருகின்றன. அதேபோல் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள், பீடி இலை கடத்தலும் அதிகரித்து உள்ளது. இதனால் கடலோர பகுதிகளில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் தொடர்ச்சியாக கடத்தல் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. 


இந்தநிலையில் தருவைகுளம் உதவி ஆய்வாளர் முத்துமாரி தேவேந்திரருக்கு கிடைத்த தகவலின்படி நேற்று இரவு 10 மணி அளவில் போலீசார் சாலையில் நிறுத்தியிருந்த சரக்கு வாகனத்தை சோதனை செய்ததில் 35 கிலோ வீதம் 37 மூடைகளில் பீடி இலை பண்டல்கள் இருந்தது. இதனை இலங்கைக்கு படகு மூலம் கடத்த முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து பீடி இலைகளை சரக்கு வாகனத்துடன் போலீசார் பறிமுதல் செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here