:
ஒவ்வொரு ஆண்டும் தைத்திருநாளில் மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, ,அலங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் மிகச் சிறப்பாக நடைபெறும்.
அந்த வகையில், முதல் போட்டியான அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி இன்று கோலாகலமாக தொடங்கியது,
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் ஆன்லைன் முறையில் முன் பதிவு செய்யப்பட்டு 14 காளைகள் 314 மாடுபிடி வீரர்கள் பங்கு பெறுவார்கள்.
. காலை 8 மணிக்கு தொட ங்கப்பட்ட இந்த போட்டி மாலை 4 மணி வரை நடைபெறும்.
களத்தில் மாடுபிடி வீரர்கள் மாட்டை பிடித்துக் கொண்டே 50 மீட்டர் தூரம் செல்ல வேண்டும். வால் மற்றும் கால்களை பிடிக்கக் கூடாது. இப்படி சரியாக காளையை படிப்பவர்கள் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார்கள். காளையை யாரும் பிடிக்காமல் காளை தப்பி சென்றால் மாடு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.
வெற்றி பெறும் மாடுபிடி வீரர் மற்றும் காளைக்கு சைக்கிள், குத்துவிளக்கு,அண்டா,மிக்சி,
குக்கர்,பித்தளை பானைகள்,தங்க காசு,இருசக்கர வாகனம்,கார், ரொக்க பணம் என பரிசு பொருள்கள் வழங்கப்படும்.
ஜல்லிக்கட்டு போட்டியில், பாதுகாப்பு பணிக்காக மதுரை மாநகர காவல் ஆணையாளர் தலைமையில் 1000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காளைகள் மருத்துவ பரிசோதனைக்காக 50-க்கு மேற்பட்ட மருத்துவர்கள் அடங்கிய மருத்துவ குழுவினர்கள் முதலுதவி குழுவினர்கள் தயாராக உள்ளனர்.
மாடுபிடி வீரர்களுக்கு ஏதேனும் காயம் ஏற்பட்டால் மருத்துவ குழுவினர்கள் 10 ஆம்புலன்ஸ்கள் தயாராக உள்ளன. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி முடிந்த பின்,நாளை பாலமேடு பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டியும் அதனைத் தொடர்ந்து, உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.















