நாங்குநேரி ஓட்டல் உரிமையாளரிடம் வாட்ச் பறிப்பு

0
370

நாங்குநேரி கீழரதவீதியை சேர்ந்தவர் சுடலைக்கண்ணு (52). இவர் நாங்குநேரி பஸ் நிலையம் அருகே ஓட்டல் வைத்துள்ளார். சம்பவத்தன்று இவரது ஓட்டலுக்கு வந்த மருகால்குறிச்சியை சேர்ந்த சுடலைக்கண்ணு மகன் வேல்முருகன், நாங்குநேரியை சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் ஐகோர்ட் ஆகியோர் அவரிடம் செலவுக்கு ரூ.1000 தருமாறு கேட்டனர். அதற்கு சுடலைக்கண்ணு மறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த 2 பேரும் அரிவாளை காட்டி மிரட்டி அவர் கையில் அணிந்திருந்த ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள வாட்சை பறித்து சென்று விட்டனர்.

இதுபற்றி அவர் நாங்குநேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, வேல்முருகன், ஐகோர்ட் ஆகியோரை தேடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here