நெல்லை மாவட்டம் புளியங்குடி அரசு மருத்துவமனையில் தினசரி 500க்கும் மேற்பட்ட புறநோயாளிகளும், 50க்கு மேற்பட்ட உள்நோயாளிகளும் சிகிச்சை பெறுன்றனர். இந்நிலையில் கடந்தமாதம் 28ந்தேதி மருத் துவமனை அலுவலகத்தில் இருந்த கம்ப்யூட்டர் மானிட்டரை மர்மநபர் திருடிச் சென்றார்.
இதுகுறித்து டாக்டர் முத்துக்குமார் புளியங்குடி போலீசில் புகார் செய்தார்.
வழக்குப்பதிவு செய்து கம்ப்யூட்டரை திருடிய நபரை தேடிவந்த நிலையில் நேற்று புளியங்குடி சப்-இன்ஸ்பெக்டர் தர்மராஜ் ரோந்துப் பணியில் ஈடுபட்ட போது சிந்தாமணி பஸ்நிலையம் அருகே சந்தேகப்படும்படி நின்ற வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் டி.என். புதுக்குடி கேடிகே தெருவைச்சேர்ந்த அமல்ராஜ்(27) என்பதும், அரசு மருத்துவமனையில் மானிட்டர் திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து கம்ப்யூட்டர் மானிட்டரை பறிமுதல் செய்தனர்.