நெல்லை சாப்டர் பள்ளியில் கழிவறை சுவர் இடிந்து 3 மாணவர்கள் பலி

0
1228

நெல்லை சாப்ட்டர் பள்ளியில் சுற்றுச்சுவரை ஒட்டி கழிவறை உள்ளது. இன்று மாணவர்கள் அந்தக் கழிவறையைப் பயன் படுத்திக் கொண்டிருந்த நிலையில் கழிவறை சுவர் இடிந்து விழுந்து அதிலே சில மாணவர்கள் சிக்கினார்கள். இதில் மூன்று மாணவர்கள் உயிர் இழந்தனர்.இரு மாணவர்கள் அதே இடத்திலும், ஒருவர் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையிலும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

உயிரிழந்த மாணவர்கள் 8ஆம் 9ஆம் வகுப்பு படிப்பவர்கள். அவர்கள், அன்பழகன்,விஸ்வ ரஞ்சன் ஆகியோர் பெயர் உறுதி செய்யப்பட்டுள்ளன.

கழிவறையின் சுவர் இடிந்து விழுந்த சம்பவத்தை கண்டித்து பள்ளி மாணவர்கள்

போராட்டத்தில் ஈடுபட்டனர்.மாணவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here