வங்க தேசத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலுக்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
கடந்த ஜனவரி 1 முதல் செப்டம்பர் 23 வரை டெங்கு காய்ச்சலுக்கு 75 பேர் பலியாகியுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் மொத்தம் 162 பேர் பலியாகியிருப்பதாக உள்ளூர் பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டுள்ளன.














