மதுரையில் நேற்று கந்து வட்டி கொடுமை காரணமாக தற்கொலை செய்யப்போவதாக விடியோ வெளியிட்டு முஹமது அலி என்ற உணவக உரிமையாளர் தற்கொலை செய்துகொண்டார். இது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் அவருக்கு கந்து வட்டிக்கு பணம் கொடுத்த வக்கீல் செல்வக்குமார், அவரது நண்பர்களான ஜெயேந்திர சிங், மாரிமுத்து, காமாட்சி ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.