தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் ஒன்றியத்தில் பல்வேறு கிராமங்கள் உள்ளன. இங்கு முழுமையாக விவசாயிகள் பணியில் நடைபெற்று வருகிறது. இந்த பகுதியில் முக்கியமாக ஐந்துக்கும் மேற்பட்ட கல்குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று கருங்குளம் அருகே அரசர்குளம் பகுதியில் திடீரென்று ஜோடியாக இரு ஹெலிகாப்டர்கள் மிகவும் தாழ்வாக பறந்து சென்றது. இதனால் அப்பகுதி மக்கள் திடீரென்று அச்சத்துடன் பார்த்தனர். தொடர்ச்சியாக சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம் பகுதியில் அவ்வப்போவது ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்து செல்வது குறிப்பிடத்தக்கது. எதற்காக ஹெலிகாப்டர்கள் அடிக்கடி தாழ்வாகப் பறந்து செல்கிறது? என தெரியாமல் மக்கள் குழப்பத்தில் உள்ளனர்.









