வைகை ஆற்றில் விநாயகர் செப்பு சிலை

0
633

சோழவந்தான் அருகே கருப்பட்டி கிராமத்தில் வைகை ஆற்றில் செம்பு உலோகத்தால் ஆன விநாயகர் சிலை கிடப்பதாக சோழவந்தான் போலீசாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து அங்கு சென்று சிலையை காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

ஒன்னே முக்கால் அடி உயரம் கொண்ட ஒன்றரை கிலோ எடை கொண்ட செம்பு உலோகத்தால் ஆனது என்று ஆய்வில் தெரியவந்தது.இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலை தடுப்பு பிரிவினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இந்த சிலை வைகை ஆற்றில் எப்படி வந்தது? எங்காவது திருடி வந்து உள்ளனரா? என்று போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here