சென்னை தாம்பரம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் விஜய் நடித்த பிகில் பட பாடல் வெளியீட்டு விழா நடந்தது.
தமிழகத்திலிருந்து மட்டுமின்றி, கேரள, கர்நாடக பகுதிகளில் இருந்தும் ரசிகர்கள் வந்திருந்தனர். கல்லூரி வளாகத்துக்கு வெளியே ரசிகர் கூட்டம் அலைமோதியதால் போலீசார் அவர்களை கலைந்துசெல்லுமாறு கூறினர். பாஸ் வைத்திருந்ததால் ரசிகர்கள் கலைந்துசெல்ல மறுத்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த போலீசார் ரசிகர்கள் மீது தடியடி நடத்தினர். அதனால் அவர்கள் சிதறி ஓடினர்.














