தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு வட்டாட்சியர் அலுவலக கட்டடத்தின் முதல் மாடியில் நில அளவை பிரிவு உள்ளது. இந்த பிரிவில் தூத்துக்குடி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவின் துணை கண்காணிப்பாளர் ஹெக்டர் தர்மராஜ் தலைமையில் ஆய்வாளர் சுதா, தணிக்கைக் குழு அலுவலர் முகமது இப்ராஹிம் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு போலீஸார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது நில அளவை பிரிவு வட்ட துணை ஆய்வாளர் ஸ்டான்லியிடம் கணக்கில் காட்டப்படாத ரொக்கப்பணம் ரூ.14,500 மற்றும் 6 இனிப்பு பெட்டிகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ஊழல் தடுப்பு பிரிவு போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து ஸ்டான்லியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.









