தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கடற்கரை பகுதியில் கடந்த சில மாதங்களாக கடல் தண்ணீரால் கடற்கரையோரம் அரிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் முருகப்பெருமானின் சந்தோஷ மண்டபம் அருகே கடல் தண்ணீரில் நேற்று அரிப்பு ஏற்பட்டது.இது சூரசம்காரம் நடைபெறும் இடம் என்பதால் பக்தர்கள் வேதனையடைந்துள்ளனர்.