காவல் நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்து – புரோக்கர்கள் மூலம் வசூல்

0
895

திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்து
புரோக்கர்வைத்து வைத்து வசூலிப்பதாக புகார்
மதுரை ஜூலை10 திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புரோக்கர் வைத்து பணம் வசூலித்து கட்டப்பஞ்சாயத்து நடத்துவதாக கமிஷனர் மற்றும் முதலமைச்சரிடம்புகார் செய்துள்ளனர்.


மதுரை வில்லாபுரம் வீட்டுவசதிவாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த பெண்ஒருவர் தனது கணவன் மாமனார் மாமியார் ஆகியோர் மீதுவரதட்சணை கொடுமை,கொலைமிரட்டல் மற்றும் பெண்சிசு கொலை மிரட்டல் தொடர்பாக திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.புகாரை விசாரித்த போலீசார் எதிரிகளிடம் விசாரணை செய்யாமல் அவர்களை காப்பாற்றி புகார் மனுவை முடிக்கும் நோக்கத்திலேயே செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டுகின்றனர். மனுதாரரை மட் டும்அழைத்து அசிங்கமாகவும் ஆபாசமாகவும் பேசி எதிரியைகாபாற்றி பலன் அடைவதாகவும் கூறப்படுகிறது.இதற்கு சுரேஷ் என்பவர் புரோக்கராக செயல்படுவதாகவும் கூறப்படுகிறது.

புரோக்கர் இல்லாமல் வருபவர்களை விசாரணை என்ற பெயரில் அவர்களை அலைக்கலித்தும் காக்க வைத்து திருப்பி அனுப்பி வைப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர்..தினக்கூலி குடும்பத்தில் பிறந்த கம்பத்தை சேர்ந்த பெண் ஒருவர் ஏழை என்பதால் ஏழு வருடங்களாக அவரை அலை ய விடுவதாகவும் அலைக்கலிப்பதாகவும் அவர் கண்ணீர் விட்டு கதறி அழுதார்.மற்றொரு பெண்ணின் டிரைவரின் கணவரின் முகவரியை கொடுத்து நீயே சென்று அழைத்து வா விசாரிக்கலாம் ஒன்று அனுப்பி வைத்துள்ளனர்.ஏற்கனவே அடித்து உதைத்து சித்திரவதை செய்தவரை எப்படி என்னால் அழைத்து வரமுடியும் என்று கண்ணீர்விட்டுகதறியபடிஅவரும் சென்றுள்ளார்.

மற்றொருபெண்ணை அழைத்து தனியாக ரவுண்ட்கட்டி விசாரணை என்றபெயரில் அசிங்கமாகவும் கேலியாகவும் ஆபாசமாகவும் பேசிஎதிரிக்கு சாதகமாக எழுதி வாங்கி புகாரை முடித்துள்ளனர்.இதனால் பாதிக்கப்பட்டபெண்களின் கணவர் குடும்பத்துடன் புரோக்கரின் மூலமாக தப்பித்து விடுவதாகவும்.இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ஒருவர் போலீஸ் கமிசனருக்கும் முதலமைச்சரின் சிறப்புப்பிரிவிலும் புகார் தெரிவித்துள்ளார்.

உரியநடவடிக்கை எடுக்ககோரி அணைத்து மகளிர் காவல் நிலையம் முன்பாக சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here