பிஎஸ்என்எல் அதிரடி ஆஃபர்

0
695

சலுகை அறிவிப்புகள் மூலம் தங்கள் சந்தையை விஸ்தரித்த தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களான பாரதி ஏர்டெல், வோடஃபோன் ஐடியா, ஜியோ போன்றவை நட்டம் அடைந்துவிட்டதாக கூறி கட்டண உயர்வை அறிவித்துள்ளன.
இந்நிலையில் இந்திய அரசாங்கத்தின் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். மெகா ஆஃபர் ஒன்றை அறிவித்து அதிரடி ஆட்டம் ஆடுகிறது.
அதன் அறிவிப்பில், ‘ரூ.1699க்கு 365 நாட்களுக்கு தினசரி 250 நிமிடம் கால்கள் இலவசம், தினசரி 2 ஜிபி இணையவசதி மற்றும் 100 எஸ்.எம்.எஸ் இலவசம்’ என்று தெரிவித்துள்ளது.
மேலும் அந்த அறிவிப்பில், ‘நவம்பர் மாதத்திற்குள் பி.எஸ்.என்.எல் தொலைதொடர்பு சேவை பயன்படுத்தி இந்த ஆஃபரை அணுகுபவர்களுக்கு 365+60 நாட்கள் இலவசம்’ என்றும் சலுகை காட்டியுள்ளது.
4ஜி இணையசேவை கிடைத்த உடனேயே சூட்டோடு சூடாக இந்த அறிவிப்பை பிஎஸ்என்எல் வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here