JUST NOW: சாத்தான்குளம் பகுதியில் இடியுடன் கூடிய கனமழை

0
588

சாத்தான்குளம் சுற்று வட்டாரப்பகுதிகளில் இடி காற்றுடன் கூடிய பலத்த மழை.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக கடும் வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்த நிலையில் தற்போது ஒரு வார காலமாக அவ்வப்போது ஆங்காங்கே சில நேரங்களில் குளிர்காற்று வீசி வெயில் சற்று தணிந்து காணப்பட்டு வந்தது.


ஆனால் நேற்று கடும் வெயில் வாட்டி வந்த நிலையில், இன்று காலையிலும் வெயில் வாட்டி வதைத்து வந்தது. சாலைகளில் கடும் வெயிலால் கானல் நீர் பறந்தது.


இதற்கிடையில் இன்று மதியம் சுமார் 1 மணி அளவில் தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பகுதியில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்தது.


திடீரென இடி மற்றும் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்யத் தொடங்கியது. சாத்தான்குளம், சுப்புராயபுரம், கடாட்சபுரம், முதலூர், இட்டமொழி சாலை, அமுதுண்ணாக்குடி, வள்ளியம்மாள்புரம், விஜயராமபுரம், தளவாய்புரம், முத்துகிருஷ்ணாபுரம், கருங்கடல், பனைகுளம், செட்டிகுளம் உள்பட அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக காற்றுடன் பெய்த கனமழையால் சாலைகளில் மழை நீர் பாய்ந்தோடியது.


கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் திடீரென பெய்த மழையால் பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here