வரும் 2020-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்காக வெளியூர் செல்பவர்கள் ரயில் டிக்கெட்டுகளை நாளை முதல் முன்பதிவு செய்யலாம் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
பண்டிகை நாட்களுக்கு முன் கூட்டியே முன்பதிவு செய்யும் நடைமுறை அமல்படுத்தப்பட்டு பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
தீபாவளி பண்டிகைக்கான முன்பதிவு ஏற்கெனவே முடிந்துள்ள நிலையில் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை முதல் ஆரம்பமாகிறது. ஜன.10-ம் தேதி முதல் பொங்கல் பண்டிகை முடிந்து ஊர் திரும்ப வசதியாக ஜனவரி 19-ம் தேதி வரை டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுகின்றன,
தினமும் காலை 8 மணிமுதல் டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது. பொங்கல் பண்டிகையை தங்கள் குடும்பத்தினர்களுடன் கொண்டாட சொந்த ஊருக்குச் செல்பவர்கள் நாளை முதல் முன்பதிவு செய்து கொள்ளவும். இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.














