சாத்தான்குளம் அருகே பயங்கர விபத்து – லாரி, கார் மோதல்

0
3790

வீடியோ கீழே

கேரளா ஸ்ரீ காவியம் சித்ரா காந்திபுரத்தை சேர்ந்த முரளிதரன் என்பவரது மகன் அருண் (33). வழக்கறிஞரான இவர் தந்தை முரளிதரன் (63). தாய் பத்னா(58) குமாரி, மகள் ஜானகி (4). அருண் மனைவி மற்றும் அவரது மற்றுமொரு குழந்தையோடு திருச்செந்தூர் கோயிலுக்கு ஆவணி திருவிழா கொடியேற்றத்தில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் அவர்கள் தங்களது காரில் கேரளா செல்வதற்காக சாத்தான்குளம் அருகே உள்ள பன்னம்பாறை பகுதியில் வந்த போது எதிரே கல்குவாரியில் இருந்து மணல் ஏற்றிக் கொண்டு வந்த மினி லாரி, கார் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் அருண் குடும்பத்தினர் 6 பேரும் மினி லாரி டிரைவர் முத்துக்குமார் (49) என்பவரும் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்த அனைவரும் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக நாகர்கோயில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து சாத்தான்குளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here