நெல்லை பஸ் நிலையத்தில் கூலித் தொழிலாளி தற்கொலை முயற்சி

0
980

இருக்கன்குடி அருகே உள்ள வடுகன்பட்டியைச் சேர்ந்தவர் ரகுவரன் (20). இவர் காளி என்கின்ற ஒப்பந்ததாரரிடம் பாளையங்கோட்டை அன்பு நகரில் கட்டட வேலை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று பிற்பகல் நெல்லை புதிய பஸ் நிலையத்திற்கு வந்த ரகுவரன் பஸ் நிலைய கட்டடத்தின் மேல் மாடியில் ஏறி கீழே குதிக்கப் போவதாக மிரட்டல் ஒப்பந்ததாரர் காளி 3000 ரூபாய் சம்பளம் பாக்கி வைத்துள்ளதாகவும் வாங்கி தந்தால் தான் கீழே இறங்குவேன் என்றும் அவர் அடம்பிடித்தார்.

மேலப்பாளையம் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் தீயணைப்பு அலுவலர் ராஜா உள்ளிட்டோர் அவரை கீழே இறங்கும்படி தாஜா அவர் மறுத்ததால் சிலர் மேலேறி பிடிக்க முயன்றனர். அவர்களுக்கு தப்பிய ரகுவரன் கீழே தீயணைப்பு படையினர் விரித்து பிடித்த வலையில் விழுந்தார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here