உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் 4 பேருக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு இதற்கான உத்தரவை பிறப்பித்தார்.
கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ரிஷிகேஷ்ராவ், பஞ்சாப் ஹரியானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கிருஷ்ணா முராரி, ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ரவீந்திரபட், ஹிமாச்சல பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராமசுப்பிரமணியன் ஆகியோர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.