தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் வேலு நாச்சியார் பிறந்த நாளை முன்னிட்டு ஏழை எளிய பெண்களுக்கு தையல், ஆரி ஒர்க், மற்றும் மேக்கப் கலை இலவச பயிற்சி வழங்கும் கூடம் திறப்பு
தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் வேலு நாச்சியார் பிறந்த நாளை முன்னிட்டு ஏழை எளிய பெண்கள் பயன்பெறும் வகையில் அழகு கலை பயிற்சி, ஆரி ஒர்க் பயிற்சி மற்றும் தையல் பயிற்சி இலவசமாக கற்றுக் கொடுக்கும் அலுவலகம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு தூத்துக்குடி மேற்கு மாவட்ட பொறுப்பாளர் சரவணன் கலந்துகொண்டு பயிற்சி கூடத்தை திறந்து வைத்தார்.
தொடர்ந்து சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏழை எளிய பெண்கள் உள்ளிட்டோருக்கு இத்தகைய பயிற்சி வகுப்புகள் தொடங்கியது. அவர்களுக்கு 3 ஆசிரியர்கள் கொண்டு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிகழ்வில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.








