குமரி இளந்தொழிலதிபர் மர்ம மரணம் – உறவினரின் பிளாக்மெயில் காரணமா?

0
464

குமரி மாவட்டம் தக்கலை காவல் நிலைய பகுதிக்குட்பட்ட முளகுமூடு அருகே கூட்டமூடு பகுதியை சேர்ந்தவர் ராஜமணி காண்ட்ராக்டர் மகன் ஐயப்பன் (36). ரப்பர் ஷீட் வாங்கி விற்கும் தொழில் மற்றும் அடகு கடை உட்பட பைனான்ஸ் நிறுவனங்கள் நடத்தி வந்துள்ளார். இவருடைய முதல் மனைவி கருத்து வேறுபாடு காரணமாக சுமார் மூன்று வருடங்களுக்கு முன் அவருடைய தாயார் வீட்டில் வைத்து ஆசிட் குடித்தார். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் இறந்துவிட்டார். அப்போது ஐயப்பன் தனது மனைவியின் உடலை வீட்டிற்கு கொண்டு வந்து தனக்கு சொந்தமான இடத்தில் உடல் அடக்கம் செய்தார்.

முதல் மனைவி மூலமாக இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது. இரண்டு சிறு பெண் குழந்தைகளையும் வளர்க்க மிகவும் கஷ்டப்பட்டார். இதனால் இரண்டாவதாக சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன் கணவரை இழந்த ஒரு பெண்ணை திருமணம் செய்தார். அவருக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ளது. அந்தப் பெண் குழந்தையும் சேர்த்து மூன்று பெண் குழந்தைகளையுடன் இரண்டாவது மனைவியுடன் குடித்தனம் நடத்தி வந்தார்.

சொந்த வீடு, கார் உட்பட வசதியுடன் வாழ்ந்து வந்த நிலையில் மிக நெருங்கிய மைத்துனர் உறவு முறை கொண்ட உறவினர் ஒருவர் முதல் மனைவியை ஐயப்பன் கொலை செய்ததாக வழக்கை திசை திருப்பி விடுவதாகக் கூறி மிரட்டி பல்வேறு காலகட்டங்களில் மிரட்டி பல லட்ச ரூபாய் பெற்றுள்ளார்.

தற்போது மீண்டும் ஐந்து லட்ச ரூபாய் கேட்டு மிரட்டியதாகவும், தரவில்லை எனில் நீதிமன்றத்தில் வழக்கு போட்டாவது கொலை வழக்கில் சிக்க வைத்து விடுவேன் என்று கூறி அந்த மைத்துனர் \இவருடைய தொழில் நிறுவனத்தின் முன் வந்து சண்டையிட்டு சென்றதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர்.

ஏற்கனவே, ஒன்றிரண்டு முறை முதல் மனைவியின் தாயார் மற்றும் உறவினர்களை அழைத்துக் கொண்டு வந்து இவன்தான் உங்கள் மகளை கொன்றான் என்று கூறி பிரச்சினைகளை உருவாக்கியதால் ஐயப்பன் மிகவும் பயந்துள்ளார்.

இந்நிலையில், வீட்டிலிருந்து வெளியே சென்ற ஐயப்பனை காணவில்லை. அவருடைய மனைவி ஐயப்பன் செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. அதன் பின்னர் பல்வேறு இடங்களிலும் தனது கணவரை தேடியுள்ளார். ஆனால் எந்த தகவலும் கிடைக்காத நிலையில் மருந்து கோட்டை பகுதியில் தோட்டத்தில் தூக்கிட்ட நிலையில் சடலமாக கிடைத்துள்ளார்.

இதுகுறித்து தக்கலை போலீசார் விசாரித்து வரும் நிலையில், ஐயப்பனின் செல்போனை ஆராய்ந்தால் அவர் இறப்பின் மர்மம் விலகும் என்று உறவினர்கள் கூறுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here