காஷ்மீர் இளைஞர்களுக்கு துப்பாக்கி வேண்டாம்: இந்திய ராணுவம்

0
549

துப்பாக்கிகளை எடுக்க வேண்டாம், பிரகாசமான எதிர்காலத்திற்காக பாடுபடுங்கள் என இந்திய ராணுவம் காஷ்மீர் இளைஞர்களை கேட்டுக்கொண்டுள்ளது.

எக்ஸ்வி கார்ப்ஸின் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கன்வால் ஜீத்சிங் தில்லான், இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- இளைஞர்கள் ஆயுதங்களை எடுப்பதில் ஈர்க்கப்படக்கூடாது. ஜம்மு-காஷ்மீரில் உள்ள இளைஞர்கள் ஆயுதங்களைஎடுப்பதைத்தவிர்க்கவும், அதற்கு பதிலாக, பிரகாசமான எதிர்காலத்தை உறுதிசெய்யும் வகையில் செயல்படவேண்டும். ஜம்மு-காஷ்மீரின் இளைஞர்கள் சிறந்த எதிர்காலத்திற்காக கடுமையாக உழைக்க வேண்டும், ஆயுதங்களை எடுப்பதில் ஈர்க்கப்படக்கூடாது.

நீங்கள் உங்கள் பெற்றோர்களையும் உங்கள் குடும்பத்தினரையும் பெருமைப்படுத்த வேண்டும். உலகில் எல்லா வாய்ப்புகளும் உங்கள் வீட்டுவாசலில்உள்ளன. காஷ்மீரின் இளைஞர்கள் காஷ்மீரின் எதிர்காலம் என கூறினார்.

ஜம்மு-காஷ்மீரைச்சேர்ந்த 575 இளைஞர்கள் கடந்த சனிக்கிழமை படையில் இணைந்தனர். அவர்கள் ஜம்மு-காஷ்மீர் லைட் காலாட் படையில் சேர்க்கப்பட்டுஉள்ளனர். இந்நிகழ்ச்சியில், லெப்டினன்ட் ஜெனரல் அஸ்வினிகுமார் கூறியதாவது:- இப்பகுதியில் பல ஆள்எடுப்பு முகாம்கள் நடத்தப்படும், இது ஜம்மு-காஷ்மீரின் முகத்தை மாற்றுவதற்கான அறிகுறியாகும். வாழ்க்கையில் முன்னேற விரும்பும் அனைவருடனும் இந்திய இராணுவம் துணைநிற்கும்என்றுகூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here