கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சீரமைப்பு கலந்தாய்வு கூட்டம் கன்னியாகுமரியில் நடந்தது.
கூட்டத்திற்கு கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் லாரன்ஸ் தலைமை வகித்தார்.காங்கிரஸ் நிர்வாகி ராபர்ட்சன் வரவேற்றார்.கன்னியாகுமரி நகர தலைவர் சந்தியாகுராயப்பன் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக குமரி மாவட்ட பார்வையாளர் அர்த்தநாரி கலந்து கொண்டார்.
கூட்டத்தில் மாநில மீனவர் காங்கிரஸ் செயலாளர் பாஸ்டின் ஜவஹர், மாநில துணை தலைவர் ஜவஹர், மாவட்ட பொது செயலாளர் கிருஷ்னபிள்ளை, செயலாளர் தாமஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.












