நெல்லை தெற்கு பைபாசில் விலங்கு – மனிதன் மோதல் தடுக்கப்படுமா?

0
31

திருநெல்வேலியின் தெற்கு புற வழிச்சாலை மிகவும் பரபரப்பு நிறைந்த போக்குவரத்து பகுதியாகும். நிமிடத்திற்கு நூறு வாகனங்களுக்கு மேல் பறக்கும் இந்த பகுதியின் இருபுறமும் வயல் காடுகள் உள்ளன. எனவே சாலையோரம் எருமைகள் பசுக்களை வளர்க்கும் வழக்கத்தை ஒரு சிலர் வைத்திருந்தனர்.

இந்த எருமைகள் பசுக்கள் அடிக்கடி சாலைகளை குறுக்கும் நெடுக்குமாக கடப்பதால் வாகனங்கள் மோதி விபத்துகள் நிகழ்கின்றன. இவற்றில் மாடுகளோ மனிதர்களோ பேதமின்றி அனைத்து உயிர்களும் மடியும் பரிதாபம் உள்ளதால் சாலையோரம் மாடுகளை வளர்க்க மாநகராட்சியும் நெடுஞ்சாலை துறையும் தடை விதித்தது.

ஆனாலும் தடையை மீறி மாடுகளை வளர்ப்போர் அவற்றை அலைய விடுகின்றனர். குறிப்பாக இந்த மழைக்காலத்தில் தொழுவத்தில் மாடுகளை கட்டாமல் அவிழ்த்து விட்டதால் ஒரே மாதத்தில் நான்கு ஐந்து விபத்துகள் நடந்து விட்டன. இன்று அதிகாலை ஏதோ ஒரு வாகனம் மோதி பசுமாடு ஒன்று செத்து கிடக்கிறது.

எனவே மாநகராட்சியும் நெடுஞ்சாலை துறையும் அடிக்கடி ஆய்வு செய்து நெடுஞ்சாலையில் கால்நடைகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும். உயிர்கள் அழிவதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here