தூத்துக்குடி மாவட்டம் பேய்குளம் (ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம்)ஆசீர்வாதபுரம் விலக்கு அருகே சுந்தரநாசியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலின் உண்டியலை மர்மநபர்கள் உடைத்து பணத்தை திருடியுள்ளனர்.
இதுபற்றி அறிந்ததும் ஆலய பொறுப்பாளர் ராமையா சாத்தான்குளம் போலீசில் புகார் செய்தார். லுங்கி, துண்டு அணிந்த ஒருவர் கோயில் உண்டியலை உடைத்து அங்குள்ள சிசிடிவி கேமராவில் தெரிகிறது. அந்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.