கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் திருக்கல்யாணத் திருவிழா தேரோட்டம் பக்தர்கள் பரவசம்

0
74
Oplus_131072

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் உள்ள அருள்மிகு செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாதசுவாமி திருக்கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழாவும் ஒன்றாகும்.

இந்த ஆண்டுக்கான ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா கடந்த மாதம் 25-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் மண்டகப்படிதாரர்கள் சார்பில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை மற்றும் வீதியுலா நடைபெற்று வந்தது.

Oplus_131072

விழாவின் 9-ஆம் நாளில் திருத்தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, திருவனந்தல் பூஜை நடைபெற்றது. தொடர்ந்து உற்சவ அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. பின்னர், அம்பாள் தேருக்கு எழுந்தருளினார்.

Oplus_131072

இதையடுத்து, ஒயிலாட்டம் மற்றும் மேளதாளங்கள் முழங்க, “ஓம் நமச்சிவாய… சிவாய நம ஓம்…” என்ற பக்தி முழக்கத்துடன் பக்தர்கள் தேரின் வடம் பிடித்து இழுத்தனர். நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்த தேர், பின்னர் நிலையை அடைந்தது.

இந்த நிகழ்ச்சியில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி, கோவில் அறங்காவலர் குழுவினர் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண வைபவம் நாளை நடைபெறுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here