புதிய கல்குவாரிகளுக்கு எதிராக ராதாபுரத்தில் போராட்டம்

0
571


நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகாவே கல்குவாரிகளால் நீர் வளம் இழந்து வறண்டு கிடக்கிறது. இந்நிலையில் ஆத்துகுறிச்சி பகுதியில் புதிதாக வேறு கல்குவாரிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அந்த அந்த கல்குவாரிகளை உடனடியாக நிறுத்தக்கோரி, ராதாபுரம் பேருந்து நிலையம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சமூக ஆர்வலர் குணசீலன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், சமூக ஆர்வலர் மாசானம் துரை ஆறுமுகம், பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ராதாபுரம் வட்டார விவசாயிகள் நலச்சங்கத் தலைவர் சுந்தரம், செயலாளர் ராஜபவுல், வி.சி.க மாவட்ட இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை செயலாளர்
காந்திமதி சுரேஷ், நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் இனிதா, கணேசன், கடைமடை விவசாய சங்கத் தலைவர் சுந்தரலிங்கம், தொகுதி பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக் கூட்டமைப்பைச் சேர்ந்த டோனி, வழக்கறிஞர்கள் காமராஜ், மணி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில், ஆத்துகுறிச்சி உள்ளிட்ட பல பகுதிகளில் இயங்கும், இனிமேல் தொடங்கும் அனைத்து கல்குவாரிகளையும் உடனடியாக மூட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மேலும், இராதாபுரம் தொகுதியில் விதிமுறை மீறலில் ஈடுபட்டுள்ள அனைத்து குவாரிகளையும் ஆய்வு செய்து, அவற்றின் உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் என்றும், நீர் வளம் மற்றும் கனிம வளங்களைப் பாதுகாக்க அரசு உடனடியாகக் கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

கிராமச் சாலைகளில் சுற்றுச்சூழல் மாசுபடுவதையும், அதிக பாரம் ஏற்றி வரும் கனரக வாகனங்களால் ஏற்படும் பாதிப்புகளையும் தடுக்க வேண்டும், வாகனங்களின் இயக்க நேரத்தை முறைப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here