ஆப்கானிஸ்தானில் தொடர் குண்டு வெடிப்பில் முதற்கட்ட தகவலின்படி 8 பேர் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கின்றது.
ஆப்கானிஸ்தானில் பர்வான் என்ற இடத்தில் அதிபர் அஷ்ரப் கனி பங்கேற்கும் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 24 பேர் பலியானதாகவும், 30 பேர் காயமடைந்ததாகவும் முதலில் தகவல் வெளியானது. ஆனால் 8 பேர் உயிரிழந்ததாகவும், 10 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
பர்வானை தொடர்ந்து காபூலில் உள்ள மசூத் சதுக்கம், அமெரிக்க தூதரகம் அருகேயும் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. காபூலின் மற்றொரு இடத்திலும் குண்டு வெடித்ததாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை.














