முதல் காதலை மறைத்து இரண்டாம் காதல் இரு காதலர்களையும் இழந்த நர்ஸ்

0
362

கோவை சிங்காநல்லூர் பிள்ளையார் கோவில் வீதியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவரின் மகன் கணேசன் (27) .இவர் கோவை திருச்சி சாலையில் உள்ள பிரபல மருத்துவமனையில் டிரைவராக பணிபுரிந்து வந்தார். அதே மருத்துவமனையில் புதுக்கோட்டையைச் சேர்ந்த கவிதா என்ற பெண் நர்சாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கணேசனுக்கும் நர்ஸ் கவிதாவிற்கு இடையே காதல் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் பல இடங்களில் ஜாலியாக சுற்றி வந்துள்ளனர். கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு 7ஆம் தேதி கவிதாவும் கணேசனும் பதிவு திருமணம் செய்துகொண்டனர்.

பதிவுத் திருமணம் செய்து கொண்ட தகவலை நர்ஸ் கவிதா தனது வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் ஆக வைத்துள்ளார். கவிதா, புதுக்கோட்டையில் வேலை செய்தபோது நாமக்கல்லை சேர்ந்த ஒரு இளைஞருடன் காதல் ஏற்பட்டு ஐந்து ஆண்டுகளாக அவருடன் பழகி வந்துள்ளார். இதை மறைத்து டிரைவர் கணேசனுடன் மீண்டும் பழகி காதல் திருமணம் செய்துள்ளார்

காதல் திருமணம் செய்த தகவலை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் மூலம் அறிந்துகொண்ட கவிதாவின்  காதலன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நாமக்கல்லில் தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அறிந்த கவிதா அழுது புலம்பியுள்ளார். இந்த தகவல் கவிதாவின் கணவர் கணேசனுக்கும் தெரியவந்தது.

இதுகுறித்து கவிதாவிடம் கணேசன் கேட்டுள்ளார் .அதற்கு அவர் சரிவர பதில் அளிக்காமல் இருந்துள்ளார். ஏற்கனவே ஒருவனை காதலித்து கொண்டு தன்னையும் தற்போது பதிவு திருமணம் செய்து கொண்டாயா என்று கேட்டு ஆத்திரத்தில் சண்டை போட்டுள்ளார் . மேலும்,மனம் உடைந்த நிலையில் இருந்து வந்த கணேசன் நேற்று மாலை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி தகவல் அறிந்த சிங்காநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கணேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் .மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here