மனிதப் பேராசையால் உலகில் உள்ள பிற உயிர்கள் மிகவும் துன்புறுகின்றன. குறிப்பாக அரிய விலங்கினங்களை வேட்டையாடி தன்னுடைய லாபம் வெறியை மனிதர்கள் தணித்து கொள்கிறார்கள் . அதுபோக வளர்ச்சி திட்டங்களுக்காக அவர்கள் அமைக்கும் சாலை ரயில்வே தடங்களால் வன உயிரினங்கள் அடிபட்டுச் சாகின்றன.
செங்கோட்டை அருகே ரயிலில் அடிபட்டு ஒரு புலி உயிரிழந்துள்ளது. அது குறித்து கேள்விப்பட்ட வனத்துறையினர் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் அங்கு சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.














