ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு காலவரையின்றி ஒத்தி வைப்பு: டெல்லி நீதிமன்றம்

0
610

ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்துக்கு எதிரான ஏர்செல்-மேக்சிஸ் வழக்கை டெல்லி நீதிமன்றம் காலவரையின்றி தள்ளி வைத்துள்ளது. அமலாக்கத்துறையின் கோரிக்கையை ஏற்று காலவரையின்றி இந்த வழக்கை தள்ளி வைத்துள்ளது.

சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா மற்றும் சிறப்பு அரசு தரப்பு வழக்கறிஞர் என்.கே.நட்டா ஆகியோர், “அமலாக்கத்துறை விசாரணை செய்து மேலும் தகவல்களைத் திரட்டும் வரை வழக்கை காலவரையற்று தள்ளி வைக்க வேண்டும்” என்று அமலாக்கத்துறை சார்பாக கோரிக்கை எழுப்பினர்.

இந்த வழக்குத் தொடர்பாக பல்வேறு நாடுகளுக்கும் கடிதம் அனுப்பப் பட்டுள்ளது, அவர்களிடமிருந்து பதில்களுக்காகக் காத்திருப்பதாக அமலாக்கத்துறை தன் மனுவில் தெரிவித்துள்ளது.

“மேலும் விசாரணைகள் நிலுவையில் இருப்பதாலும், அரசு தரப்பு ஒவ்வொரு முறையும் ஒத்திப் போட வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருப்பதாலும் நீதியின் நலன் கருதி, விசாரணை அமைப்பு தேவையான கூடுதல் தகவல்களைத் திரட்டுவதற்கும் பிறநாடுகளுக்கு அனுப்பிய கடிதங்களின் பதில்களை பெற்று வழக்கு விசாரணையை மீண்டும் துவங்கி நிறைவு செய்வதற்காகவும் இந்த வழக்கு காலவரையின்றி தள்ளி வைக்கப்படுகிறது” என்று நீதிபதி ஓ.பி.சைனி உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் வியாழனன்று ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் இருவருக்கும் முன்ஜாமீன் அளித்தது. ப.சிதம்பரம் தற்போது ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் திஹார் சிறையில் உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here