ஆலயத்தில் திருவிழா என்றால் பொதுவாகவே “ஆனை சப்பரம் மேளம் கொட்டு” என்றே கொண்டாடுவோம். பெரிய ஆலயங்களில் இராஜமேளம் என்பது மிகச்சிறப்பாகவே இருக்கும்.
.
ஆனால் திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் அவ்வித மேளச்சத்தம் கேட்க வாய்ப்பு இல்லை என்கின்றனர்.
கடந்த பத்து ஆண்டுகளில் ஆனிப்பெருந்திருவிழாவில் கூட சிறப்பு நாதஸ்வரம் ஏற்பாடு செய்யப்படவில்லை.
.இதற்கு முந்தைய ஆண்டு வரை படித்தர நாதஸ்வர பணி செய்யும் வித்துவான்களே சிற்ப்பு மேளம் வாசித்து வருவதாகவாவது பத்திரிக்கையில் வந்தது, இந்த ஆண்டு அதுவுமில்லை.
இதே ஆலயத்தில் தமிழகத்தின் மிகச்சிறந்த நாதஸ்வர வித்துவான்களான திருவெண்காடு சுப்பிரமணிய பிள்ளை, திருவாவடுதுறை இராஜரத்தினம் பிள்ளை, காருக்குறிச்சி அருணாசலம் ஐயா முதலிய மேதைகள் பல்வேறு விழாக்களில் வாசித்து மக்களுக்கு நாத இன்பம் நல்கியுள்ளனர்.

மேலும் தமிழகத்தின் பல்வேறு ஆலயங்களின் ஆஸ்தான வித்வான்கள் யாவரும் இங்கு நெல்லையப்பர் கோவிலில் பல்வேறு விழாக்களில் வாசித்து வந்துள்ளனர்.
கடந்த பத்து ஆண்டுகளில் இக்கோயிலில் வெளியூர் வித்வான்கள் யாரும் சிறப்பு கச்சேரி வாசிக்கவில்லை. கட்டளைக்காரர்கள் முயற்சியில் வித்வான்கள் வந்தால் அவர்களையும் நிம்மதியாக வாசிக்க விடுவதில்லை.
பொதுவாக ஆலய மரபில் இறைவன் புறப்பாடு தொடங்கும் போது ” மல்லாரி” இராஜமேளத்தில் இசைக்கப்படும் ஆனால் அதற்குக்கூட ஆலய நிர்வாகம் அனுமதிக்காமல் சப்பரங்களை நகர்த்துகிறது. உள்ளூர் வித்வான்கள் ஏதேனும் கூறினால் போலீஸ் அனுமதி இல்லை என்று மழுப்புகிறது. மேலும் சப்தாவர்ணத்தின் போது வாசிக்கப்பட வேண்டிய தங்க முகவீணை தற்போது வாசிப்பதேயில்லை. என பக்தர்கள் குறைை கூறுகின்றனர.