செங்கோட்டை காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் சுமார் ஒரு கிலோ எடையிலான 250 கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போதை சாக்லேட் வைத்திருந்த 02 நபர்கள் கைது
தென்காசி மாவட்டம், செங்கோட்டை காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட காலாங்கரை பகுதியில் ரோந்து பணியில் இருந்த காவல்துறையினர் அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் வாகனத்தில் கஞ்சா இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து செங்கோட்டை காவல் ஆய்வாளர் திரு. சிவராமகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில் மேற்படி கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட செங்கோட்டை பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த திருமலை என்பவரின் மகன் சிவசுப்பிரமணியன் (வயது 30) மற்றும் செங்கோட்டை முத்துசாமி தெருவை சேர்ந்த பேச்சு நாதன் என்பவரின் மகன் பாஸ்கரன் (வயது 46) ஆகிய இரண்டு நபர்களை கைது செய்து அவரிடமிருந்த ரூபாய் 85 ஆயிரம் மதிப்பிலான 01 கிலோ கஞ்சா, 01 கிலோ எடை கொண்ட 254 போதை சாக்லேட்டுகள் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்தனர்.

சிவசுப்பிரமணியன் (32) அடிக்கடி வட மாநிலங்களில் உள்ள கோயில்களுக்கு சென்று வருவது வழக்கம்,இவரது நண்பர் செங்கோட்டை முத்துசாமி தெருவை சேர்ந்த பேச்சிநாதன் என்பவரது மகன் பாஸ்கரனுடன் (40) சேர்ந்து காசியில் இருந்து கஞ்சா சாக்லேட்டுகளை கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில் மேலும் யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் எஸ்பி தனிப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.














