கன்னியாகுமரி நீலக்கடல் மேல் வானில் பறந்த வண்ண,வண்ண
பட்டங்களால் ஒரு மாலைப் பொழுது அலங்கரிக்கப்பட்டது.
கன்னியாகுமரியில்
மாலை சூரியன் அஸ்தமிக்கும் நேரத்தில். சுற்றுலா பயணிகளை வெகுவாக ஈர்த்தது.
இந்தியாவின் தென் கோடி சர்வதேச சுற்றுலா பகுதியான. குமரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் இன்றுடன் மூன்று நாட்கள் (28,29,30) ஆகிய தேதிகளில்
குமரி மாவட்டத்தின்
பல்வேறு கடற்கரை கிராமங்களில் பட்டம் பறக்கும் விழா. தமிழக சுற்றுலா வாரியத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
குமரி மாவட்டம் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் உறுப்பினர்
ராஜேஷ் குமார். தமிழக அரசின் சுற்றுலா துறையின் அமைச்சர் என்ற நிலையிலும், மாவட்ட அமைச்சர் என்ற பொறுப்பிலும் கன்னியாகுமரி சூரிய அஸ்தமனம் பகுதியில் பட்டத்தை பறக்க விட்டார்.

நிகழ்வில், கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த்,குமரி ஆட்சியர் பிரதாப், குமரி மாவட்ட கண்காணிப்பாளர் டாக்டர் ஸ்டாலின், குமரி சுற்றுலா துறையின் அதிகாரி காமராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.
நிகழ்வில் பேசிய சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ் குமார், “கன்னியாகுமரிக்கு ஆண்டுக்கு
86_லட்சம் இந்திய நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். பன்னாட்டு சுற்றுலா பயணிகளின் 67 ஆயிரம் பேர் வரை வருகின்றனர் ” என தகவல் தெரிவித்தார்.








