கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு தட எண் 89K குலசேகரம் மார்த்தாண்டம். வண்டி எண்,TN-74 -N, 1807,
ஆறு மாத காலமாக பின் கதவு அடைப்பான் இயங்காமல் ஆபத்தான நிலையில் இருந்து வருகிறது.
புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒரு
கயிறால் கட்டப்பட்டு தற்போது இயக்கப்படுகிறது. தமிழக போக்குவரத்து துறை இது போன்ற தொழில்நுட்பத்தை தொடர்ந்து அதிக செலவில்லாமல் பயன்படுத்தி போக்குவரத்து துறைக்கு லாபம் ஈட்டித் தர முடியும் என்பது இதன் மூலம் கிடைக்கும் ஆலோசனையாக உள்ளது.
ஆயினும் திறந்த வாசலில் இருந்து விழுந்து யாருக்கும் ஏதேனும் நிகழ்ந்தால் போக்குவரத்து கழகம் என்ன இழப்பீடா கொடுக்கப் போகிறது?















