தூர்வாராத கழிவுக் கால்வாய்களால் குழந்தைகளுக்கு காய்ச்சல்

0
15

செங்கோட்டையில் பல மாதங்களாக தூர்வாரப்படாத கழிவு நீர் கால்வாய்களால் தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
10- க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளது.

செங்கோட்டை நகராட்சி 23 மற்றும் 24ஆம் வார்டு பகுதிகளில் உள்ள காமராஜர் காலணி ,பூத்தரம் , வல்லம் ரோடு பகுதிகளில் சுமார் 3,000 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கழிவுநீர் வாறுகால் முறையாக சுத்தம் செய்யப்படாததால் வீட்டுக்கு வீடு கழிவு நீர் தேங்கி நிற்கிறது , வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது . இதனால், குடியிருப்பு பகுதியில் துர்நாற்றம் வீசி, சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. மேலும் பூத்தரம் பகுதியில் சுமார் 20 வீடுகளுக்கு முன்பு கற்கள் மற்றும் செங்கல்கள் கொண்டு கழிவுநீர் வாறுகால்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளன, மேலும் இதில் குப்பை கழிவுகளும் கொட்டப்படுவதால், வடிகால்வாயில் கழிவுநீர் தேங்கி அடைபட்டுள்ளது. இதனால், குடியிருப்பு பகுதியில் துர்நாற்றம் வீசி தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பள்ளி செல்லும் மாணவ – மாணவியர், பொதுமக்கள் கடும் சிரமப்படுகின்றனர். 10க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு காய்ச்சல்ஏற்பட்டுள்ளது,

எனவே, துறைசார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, கழிவுநீர் கால்வாயில் தேங்கும் கழிவு நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து 24 வது வார்டு நகராட்சி கவுன்சிலர் செண்பகராஜன் கூறுகையில்,எனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் டெங்கு, மலேரியா போன்ற தொற்று நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது ,கடையநல்லூரில் ஏற்கனவே மர்ம காய்ச்சலுக்கு 3 பேர் இறந்துள்ளனர், பலமுறை எனது வார்டு மக்களுடன் சேர்ந்து நகராட்சி அதிகாரிகளிடம் பல முறை மனு கொடுத்தும் இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவே மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார் ,

இது குறித்து நகராட்சி சுகாதார ஆய்வாளரிடம் கேட்டபோது, செங்கோட்டை நகராட்சி ஆணையாளர் தற்போது விடுப்பில் உள்ளார் அவர் வந்தவுடன் புதிய கழிவு நீர் ஓடை அமைக்கும் பணி மேற்கொள்ளப்படும் ஒரு வாரத்தில் அதற்கான பணிகள் செய்யப்படும் என்றார் ,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here