120 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சேர்ந்து இந்த திரைப்படத்தை உருவாக்கியுள்ளனர். புதுமுக இயக்குனர் பிராட்வே சுந்தர் இயக்கியுள்ளார். சமகால அரசியலை நையாண்டி செய்யும் கதைக்களம்.
காசிவிஸ்வநாதன் தயாரித்துள்ள இத்திரைப்படத்தில் பிரகாஷ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். மதுரையைச் சார்ந்த பட்டிமன்ற பேச்சாளர் மகி கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். நடிகர் கிங்காங்குக்கு இதுவரை நடிக்காத மாறுபட்ட கதாபாத்திரம். டிக் டாக் புகழ் ஜி பி முத்துவுக்கு இது முதல் திரையுலக பிரவேசம்.
வக்கீல் செங்குட்டுவன், சுமங்கலி சதீஷ்,D முருகன் ,பாப்பா சங்கர், நாணல் ராஜ் ,சுகந்தி கோமஸ், அருண் ,சீலன் ஸ்ருதி ஆகிய மண்ணின் மைந்தர்கள் நடித்த இத்திரைப்படத்தின் இணை இயக்குனராக நிலா கார்த்திக் பணியாற்றியுள்ளார் .உதவி இயக்குனர்கள் ராஜா லாரன்ஸ், காட்டுப்பூச்சி ஜெகன், அருந்ததி அரசு ,சபரி, பிரகாஷ்.
அனைவரும் பார்க்கும் வகையில் யுஏ சான்றிதழ் பெற்ற இத்திரைப்படம் பிப்ரவரி மாதத்தில் திரைக்கு வரக் காத்திருப்பதாக இயக்குனர் பிராட்வே சுந்தர் தெரிவித்தார்.