வக்கீல் மீது வழக்கு கோர்ட்டு புறக்கணிப்பு

0
61

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் நீதிமன்றத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வழக்கறிஞர்களாக
பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் சாத்தான்குளம் நீதிமன்றத்தில் பயிற்சி பெறும் வழக்கறிஞர் ஒருவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிந்ததாக கூறப்படுகிறது. மேலும் காவல்துறையினர் சம்பந்தப்பட்ட வழக்கறிஞரை அழைத்து முறையாக விசாரணை நடத்தாமல் ஒருதலைப் பட்சமாக பழி வாங்கும் நோக்கில் வழக்கு பதியப்பட்டதாக கூறி, வழக்கறிஞர்கள் என்று பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் சாத்தான்குளம் நீதிமன்றத்தில் வழக்குகள் எதுவும் நடைபெறாமல் வெறிச்சோடி காணப்பட்டது. காவல்துறைக்கு எதிராக வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here