சிறிது நேரத்திற்கு முன்பு ரெட்டியார்பட்டியில் இருந்து திருமால் நகர் வழியே பாளையங்கோட்டைக்கு அதிவேகமாக வந்த கார் ஒன்று எதிரே வந்த கார் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் இரு கார்களிலும் இருந்த நான்கு பேர் படுகாயம் அடைந்தனர்.

ரெட்டியார்பட்டியில் இருந்து காரை ஓட்டி வந்தவர் ஏற்கனவே ரெட்டியார்பட்டி அருகே ஒருவர் மீது காரை மோதி விட்டு நிற்காமல் தப்பிக்கும் நோக்கிடம் வேகமாக வந்துள்ளார். அவரது பதற்றமும் அதிவேகமும் விபத்துக்கு அடி கோலி விட்டது தகவல் அறிந்ததும் போக்குவரத்து புலனாய்வு போலீசார் மற்றும் பெருமாள் புரம் போலீசார் விரைந்து வந்து காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்













