தூத்துக்குடி P&T காலனி பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் மகன் அஜித்குமார் (27) மற்றும் தூத்துக்குடி செல்சீனி காலனி பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் வேல்சாமி (27) ஆகியோர் அப்பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரை வழிமறித்து பணம் கேட்டு தகராறு செய்து அவரை அரிவாளால் தாக்க முயன்று கொலை முயற்சியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. உடனே போலீசார் இருவரையும் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.







